17/10/2026
இலங்கையில் வாழ்ந்த மிக உயரமானதும், மிகப் பெரியதுமான காட்டு யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட கவந்திஸ்ஸ, கல்கமுவ, மீகலேவ மற்றும் கலா ஓயா பகுதிகளில் சுற்றித் திரிந்ததாக அறியப்பட்டது.
எங்களில் பலரும் இதை வீதிகளில் பயணிக்கும்போது கண்டிருக்கலாம்.
வலது முன்காலில் துப்பாக்கிச் சூட்டால் ஏற்பட்டதாகக் கூறப்படும் கடுமையான காயத்திற்கு வனவிலங்கு மருத்துவக் குழுக்கள் சிகிச்சை வழங்கி வந்தன. காயத்தில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், பின்னர் உணவு உட்கொள்ளாமை உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் தீவிரமடைந்தன.
(2026 )அக்டோபர் 16 அன்று சியம்பலங்கமுவ பகுதியில் வயல்வெளியொன்றில் விழுந்த நிலையில் காணப்பட்ட கவந்திஸ்ஸா, தொடர்ந்த சிகிச்சை முயற்சிகளையும் மீறி உயிரிழந்தது இலங்கையெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.